போர் ஹெலிகாப்டர் ஊடுருவல்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

போர் ஹெலிகாப்டர் ஊடுருவல்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

சீனாவின் போர் ஹெலிகாப்டர் ஒன்று சமீபத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்தியா எத்தகைய சூழலையும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்திய சீன எல்லையில் உள்ள டோக்லாம் பிரச்சனை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் நேற்று முன் தினம் திடீரென சீன ராணுவத்துக்கு சொந்தமான போரில் ஈடுபடும் ஹெலிகாப்டர் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அசல் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவி பறந்தாக கூறப்படுகிறது. மேலும் சீன ராணுவம் டோக்லாமில் ஹெலிகாப்டர் தளம் ஒன்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறுகையில், ‘டோக்லாமில் எதிர்பாராத எத்தகைய சூழலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. நமது படைகளை நவீனப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நமது பிராந்திய எல்லையையும் ஒற்றுமையையும் ஒரு போதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று கூறினார்

Leave a Reply