முதல்வர் பதவியில் இருந்து திடீரென பின்வாங்குகிறாரா சசிகலா?
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எந்தவித எதிர்ப்பு இன்று மிக எளிதாக கைப்பற்ற முடிந்த சசிகலாவால், முதல்வர் பதவியை நெருங்க நெருங்க எதிர்ப்புகள் வலுத்து வருவதால் சசிகலா பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது
அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்ததும், அந்த பதவியை பிடிக்க பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு மட்டும் போதும் என்பதால் அந்த பதவியை சசிகலாவா மிக எளிதில் கைப்பற்ற முடிந்தது.
ஆனால் முதல்வர் பதவி என்பது மக்கள் கொடுத்த அங்கீகாரம். மேலும் ஏற்கனவே முதல்வர் பதவியில் இருக்கும் ஓபிஎஸ் வெளிப்படையாக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பது போன்று தோற்றமளித்தாலும் அவர் தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்ள திரைமறைவு வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி முதல்வரை சந்திக்க, அவருடைய அலுவலகத்துக்குச் நேற்று சென்ற மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். தி.மு.க சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில் உள்ள நியாயத்தை முதலமைச்சர் உணர்ந்திருந்தாலும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத ஏதோ ஒரு நெருக்கடியில் இருக்கிறார் என்பதை அந்த சந்திப்பில் உணர முடிந்தது. அதிகாரத்தைத் திரைமறைவில் இருந்து வழி நடத்துபவர்களின் அலட்சியத்தால், நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வு பாழாகிவிடக் கூடாது’ என்று கூறியிருந்தார்.
மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருகிறது. சசிகலா முதல்வர் பதவியை பெற்ற உடனே தீபா களத்தில் குதிக்க தயாராக உள்ளார். எனவே இதற்காகவும் சசிகலா தயங்குவதாக கூறப்படுகிறது.