நீரிழிவு நோயாளிகள் ஏன் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்?

diabetes

முன்பு பரம்பரை நோய் என குறிப்பிடப்பட்டு வந்த நீரிழிவு நோய் இப்போது சளி, காய்ச்சல் அளவிற்கு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என ஆகிவிட்டது. பெரும்பாலும் இதற்கு நமது உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம், சமையல் முறையில் இரசாயன கலப்புகள் நிறைந்த உணவுப் பொருள்களின் அடக்கமும் தான் இன்று பெரும்பாலானோருக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவதற்கான காரணமாக விளங்குகிறது.

குணப்படுத்த முடியாத நோய் என்பதினாலும், கடைசி வரை மருந்து மாத்திரை, இன்சுலின் ஊசிகள் மற்றும் உணவுக் கட்டுபாடினால் தான் இந்நோயை கட்டுப்படுத்த முடியும் என்பதினாலும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி அவசியம் தேவை.

அதிலும் நீரிழிவு நோயிலிருந்து ஆரோக்கியமாக இருக்க நார்ச்சத்து உணவுகள் மிகவும் உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் அடையும் ஆரோக்கிய பயன் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

இன்சுலின் சுரக்க உதவுகிறது

நார்ச்சத்து உணவுகள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது மற்றும் இன்சுலின் சுரப்பி இயற்கையாகவே உடலில் வெகுவாக சுரக்க செய்கிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது

இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு கலப்பதை குறைக்கிறது நார்ச்சத்து உணவுகள்.

பசியை தீர்க்கும்

நீரிழிவு நோயாளிகளுக்கு பசி அதிகமாக எடுக்கும். அதிக உணவு சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு கூடிவிடும். அதுவே நீங்கள் நார்ச்சத்து உணவுகள் சாப்பிடும் போது நீங்கள் குறைந்த அளவு உணவு உட்கொண்டாலே பசி அடங்கிவிடும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காது தாக்குப்பிடிக்கும்.

நிறைய கலோரி

நார்ச்சத்து உணவுகள் உங்கள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. மற்றும் கலோரிகள் அதிகமாய் அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் உடற்திறன் அதிகரிக்கும் மற்றும் அடிக்கடி பசிக்காது.

உடல் எடை

நார்ச்சத்து உணவுகள் உங்கள் உடல் எடையை சரியான அளவில் பேணிக்காக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் நிறையவே பயனடையலாம்.

Leave a Reply