தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 10ஆம் தேதி சிவப்புநிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11ம் தேதி தமிழக கடற்கரையை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 7 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.