வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துகுடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி வருகிறது என்பதால் மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.