நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போல் அதிரடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த விவகாரத்தில் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி இண்டர்போல் அதிரடி காட்டியுள்ளதால் விரைவில் நீரவ் மொடி பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வங்கி கடன் மோசடி விவகாரத்தில் நிரவ் மோடி, அவரது சகோதர் நிஷல் மோடி மற்றும் நீரவ் மோடி நிறுவனத்தின் நிர்வாகி சுபாஷ் பராப் ஆகிய மூவருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இண்டர்போலிடம் மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
நிரவ் மோடியை கைது செய்து ஒப்படைக்குமாறு தனது உறுப்பு நாடுகளுக்கு இண்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் அளித்துள்ளதால் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்படுவதால் இந்த ரெட்கார்னர் நோட்டீஸ் காரணமாக அவரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.