மார்பகம், கருப்பை புற்றுநோய் குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்

breast-cancer-main

மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜிப்மர் பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவு இணைப் பேராசிரியை ஏ.ஆனந்தி தெரிவித்துள்ளார்.

 ஜிப்மர் நல்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் பெண்களிடம் காணப்படும் மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோயை ஆரம்பக் கட்டத்தில் கண்டறியும் முறைகள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 இதில் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுக் கழக உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

பெண்களுக்குப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வையும் அதன் அறிகுறிகளையும், விளைவுகளையும், சிகிச்சை முறைகளையும் மற்றும் நோய் கண்டறிதலையும் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.

பொதுஅறுவைச் சிகிச்சை துறை இணைப் பேராசிரியை ஏ.ஆனந்தி, மாதர் நோய், மகப்பேறு மருத்துவத்துறை உதவிப் பேராசிரியை ஜெயலட்சுமி, இயன்முறை மருத்துவர் ஆர்.சலஜா, ஆகியோர் பொதுமக்கள், பெண்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து நோயை கண்டறிதல் குறித்து விவரித்தனர்.

 இதற்கான ஏற்பாடுகளை சமூக மருதுத்துவ சேவைப் பிரிவு பிரம்சிலூகாஸ், வி.சித்ரகலா ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply