ரிலையன்ஸ்-ஏர்செல் இணைகிறது. தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சி

ரிலையன்ஸ்-ஏர்செல் இணைகிறது. தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சி

28சமீபத்தில் ஜியோ சிம்கார்டை அறிமுகப்படுத்தி தொலைத்தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை உண்டாக்கிய ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ஏர்செல்லுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த இணைப்பு குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த இணைப்பு உறுதியாகியுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைபேசி சேவைப்பிரிவு மட்டும் ஏர்செல் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது.

இரு நிறுவனங்களும் இணைந்து புதிதாக உருவாக்கப்பட உள்ள நிறுவனத்தில் இரண்டு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என்றும் இணைப்புக்குப் பின்னர் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 35 ஆயிரம் கோடியாகவும், கடன் மதிப்பு 14 ஆயிரம் கோடியாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.,

இணைப்புக்கு பிறகு இந்த நிறுவனம் 19 கோடி பயனாளர்களுடன் இந்திய தொலை தொடர்பு துறையின் இரண்டாவது பெரிய நிறுவனமாக இது விளங்கும். 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply