ரூ.999-க்கு ஸ்மார்ட்போன். ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

ரூ.999-க்கு ஸ்மார்ட்போன். ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
smartphone
உலகிலேயே முதன்முறையாக ரூ.1000க்கும் கீழ் அதாவது ரூ.999 -க்கு ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்கிறது.

லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆப்ஸ்களுடன் மட்டும் வெளிவரவுள்ளது. மற்ற சாதாரண என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப், இமெயில் போன்ற வசதிகள் இருக்கும்.

முதல் ஒரு ஆண்டுக்கு பேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். பின்னர் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2ஜி நெட்வொர்க்கில் மட்டுமே சப்போர்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் டிசம்பர் 28 ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

English Summary: to launch world’s most affordable at Rs 999

Leave a Reply