ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் புதிய சலுகை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் புதிய சலுகை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்றால் அது மிகையில்லை. ஜியோ ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியிட்டாலே அது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சலுகையாகத்தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது புதிய சலுகை ஒன்றை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த ‘தண் தணா தண் சலுகை’ நிறைவு பெறவுள்ளது. இதனை தொடர்ந்து ஜியோ திட்டங்களின் விலையை மாற்றியமைத்து புதிய ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தில் ரீசார்ஜ் செய்வோருக்கு கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் தளத்தில் ரூ.300க்கும் அதிகமான விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.76 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை முழுமையாக பெற என்ன வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

– பேடிஎம் தளத்தில் ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் செய்ய மொபைல் பிரீபெயிட் அல்லது மொபைல் போஸ்ட்பெயிட் ஆ்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

– உங்களது ரிலையன்ஸ் ஜியோ மொபைல் நம்பரை பதிவு செய்து ரிசார்ஜ் செய்ய துவங்கலாம்.

– அடுத்து பேடிஎம் தளத்தில் காணப்படும் லின்க் (Have a promo code?) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

– இனி உங்களுக்கு வரும் ப்ரோமோ கோடினை பதிவு செய்து உறுதி செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் செய்வோருக்கான ப்ரோமோ கோட் பேடிஎம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முன் ப்ரோமோ கோடினை தெளிவாக படித்து அதன்பின் பதிவிட வேண்டும். ரீசார்ஜ் செய்யப்பட்டதும் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் பேடிஎம் கணக்கில் சேர்க்கப்படும்.

இதுதவிர போன் பெ (PhonePe app) செயலி மூலம் ரிலையன்ஸ் ஜியோ எண்ணிற்கு ரூ.300க்கும் அதிக விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகைகள் அந்நிறுவன இணையப்பக்கம் மற்றும் மைஜியோ செயலியில் பார்க்க முடியும். ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் திட்டங்கள் விலை ரூ.19 முதல் துவங்குகிறது. போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலை ரூ.309 முதல் துவங்குகிறது

Leave a Reply