முடிகிறது ரிலையன்ஸ் ஜியோ இலவச ஆஃபர்: அடுத்து என்ன செய்ய வேண்டும்
இந்திய தொலைத்தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ என்றால் அது மிகையில்லை. இலவச டேட்டா, இலவச கால்கள் என அசத்தலாக அறிமுகமான் ஜியோவில் தற்போது 10 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அறிமுக ஆஃபர், தீபாவளி ஆஃபர் மற்றும் கோடை ஆஃபர் ஆகியவைகளை அளித்து வந்த ஜியோவின் ஆஃபர்கள் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
ஆஃபர் முடிவாகும் தேதியை ஒவ்வொரு ஜியோ வாடிக்கையாளர்களும், ‘மை ஜியோ (MyJio)’ ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆப்பில் மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்துகொள்ள வேண்டும். அதன்பின் மெனுவில் உள்ள ‘My Plans’ ஆப்ஷனை கிளிக் செய்தால், எந்த ஆஃபரின் கீழ் நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தைக் காண்பிக்கும். அதன் கீழே அந்த ஆஃபரின் வேலிடிட்டி தேதியும் காண்பிக்கப்படும்.
இந்தத் தேதிக்குள் ரூ.309 அல்லது ரூ.509 ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோவின் சேவை தொடரும். ரூ.309 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜி.பி 4G டேட்டாவும், ரூ.509 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி 4G டேட்டாவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.