தீபாவளி முதல் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது ரிலையன்ஸ்

தீபாவளி முதல் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது ரிலையன்ஸ்
4g
சமீபத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சேவை செல்போன் சந்தாதாரர்களின் மாபெரும் வரவேற்ப பெற்று வரும் நிலையில், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும், 4ஜி சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தர தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் அம்பானி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்சின் 4G இணையதள சேவை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஒய்.எப் என்ற பிராண்ட்  பெயரில் சொந்தமாக ரிலையன்ஸ் நிறுவனம் புதிய 4G ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. அதில் இந்த 4G LTE இண்டர்நெட் சேவையை வழங்க உள்ளது. இந்த மொபைல்களில்  முழுமையான 4G வேகம் கிடைக்கும் என ரிலையன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ரிலையன்ஸ் வெளியிடும் 4G ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் ஸ்லாட்டுகளுடன், அதிக தரம் வாய்ந்த ஹை டெஃபனிஷன் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் வசதி இருக்கும்  என்று கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள 6 முக்கிய டெலிகாம் வட்டங்களில் இந்த  4G இன்டர்நெட் சேவையை ரிலையன்ஸ் வழங்கிட  உள்ளது குறிப்பிடத்ததக்கது. இந்த சேவையை வரும் தீபாவளி முதல் ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply