நிவாரண பொருட்களை மதுவாக மாற்றுகிறார்களா மக்கள்? அதிர்ச்சி தகவல்
சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் ஏராளமான நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில், ஒருசிலர் இந்த நிவாரண பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் டாஸ்மாக்கில் மது வாங்கி குடிப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஒருசிலர் நிவாரண பொருட்களையே நேரடியாக டாஸ்மாக் கடையில் கொடுத்து மது பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்துள்ளனர். தாங்கள் ஒரு போதும் இது போன்ற செயலில் ஈடுபடுவதில்லை என்றும், ஒருசிலர் பரப்பும் வதந்தியால் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த செய்தியால் நிவாரண உதவி செய்யும் தொண்டு நிறுவன பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நல்ல எண்ணத்துடன் கொடுக்கும் நிவாரண பொருட்களை குடிப்பதற்கு பயன்படுத்துவது குறித்து அவர்கள் வேதனையை தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் நிவாரண பொருட்களை மக்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.