நினைத்தாலே சேனல் மாறும். ரிமோட் தேவையில்லை. புதிய டிவி விரைவில் அறிமுகம்.

tvடிவியில் உள்ள சேனல்களை மாற்றுவதற்கு நாம் தற்போது ரிமோட்டைத்தான் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் முதல்முறையாக ரிமோட் இன்றி மூளையில் ஏற்படும் அலைகளின் உதவியால் நாம் நினைக்கும் சேனல் மாறும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு டிவி தயாரிக்கும் நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்ப டிவியை வடிவமைத்துள்ளது. இந்த டிவியுடன் இணைக்கப்பட்டுள்ள ஹெட்செட்டில் நவீன தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு எந்த சேனைலை நாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே போதும். அந்த சேனல் தானாகவே ரிமோட் இன்றி மாறிவிடும்.

சமீபத்தில் இந்த டிவி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த பரிசோதனையில் பிபிசி நிறுவனத்தை சேர்ந்த பத்து ஊழியர்கள் கலந்து கொண்டு, நினைக்கும் சேனல் மாறியதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இந்த நவீன தொழில்நுட்பம் அம்சம் நிறைந்த டிவி தற்போது சோதனை அளவில் உள்ளதாகவும், விரைவில் இந்த இது சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply