புதிய மதுக்கொள்கை மூலம் நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட மத்திய அரசு முடிவு?

tasmacதேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றும் வகையில் புதிய மதுக்கொள்கையை விரைவில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது குறித்த வழக்கு ஒன்று நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது விளக்கமளித்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ”தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றும் வகையில் புதிய மதுக்கொள்கை ஒன்றை மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து ஒரு குழு அமைக்கவும் கொள்கை அளவில் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது குறித்துக் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் விளக்கத்தை அடுத்து  இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply