கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. இப்போது கருப்பையில் பிரச்சைனை தென்பாட்டால் உடனே அகற்றிவிடுவதே தீர்வு என பலரும் நினைக்கிறார்கள். என்ன பிரச்சனை என்று கண்டறிந்து அதனை களைய முயற்சிப்பதுதான் நல்லது. தவிர்க்கவே முடியாத சூழலில் மட்டுமே கருப்பையை எடுக்க வேண்டும்.
அதிகமாக உதிரம் போதல் வலி சிறிய கட்டிகள் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். கருப்பையை அகற்றுவதால் தூக்கமின்மை, மனஉளைச்சல், உடல் சூடு, வியர்வை, மறதி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். இது தவிர தொற்று நோய்கள், எலும்புத் தேய்மானம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
அதனால் கருப்பையை அவசவப்பட்டு எடுப்பதைவிட அதை நல்ல முறையில் பாதுகாப்பதே சிறந்தது. கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.