REPCO வங்கியில் கிளார்க் & அதிகாரிப் பணி
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் 75 ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 01.08.2016-ஆம் தேதியின்படி 21 – 28,30க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcobank.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.