குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு சிறப்பு பாதுகாப்பு.

Chennai-Air-port-111இந்திய குடியரசு தினவிழா வரும் 26ஆம் தேதி வெகுசிறப்பாக கொண்டாட உள்ளதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களின் அனுமதிக்கு வரும் 30ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.60 டிக்கெட் எடுத்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்காக மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்திருப்பதால் சென்னை உள்பட நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும், இது வரும் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகை தரவுள்ளதால் டெல்லி மற்றும் வட இந்தியாவில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழாவின் போது தீவிரவாதிகளின் தாக்குதல் இருக்கலாம் என உளவுத்துறை கொடுத்துள்ள தகவலின் காரணமாக சென்னை உள்பட நாடு முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply