ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் என்ன ஆகும்? ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும், வரும் பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டி இல்லை என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒருவேளை ரஜினி கட்சி போட்டியிட்டால் என்ன ஆகும் என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை ரிபப்ளிக் டிவி எடுத்துள்ளது.
இந்த சர்வேயின்படி மொத்தமுள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் ரஜினியின் கட்சிக்கு 23 தொகுதிகளும், திமுகவுக்கு 14 தொகுதிகளும் அதிமுகவுக்கு 2 தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.