முடிந்தது முகலிவாக்கம் மீட்புப்பணிகள். 61 பேர் பலி. 27 பேர் காயம்.

chennai_bldng_apnewசென்னை போரூர் அருகே  முகலிவாக்கம் என்ற இடத்தில் நடந்த 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மீட்புப்பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதாக தமிழக வருவாய்த்துறை ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் சென்னை, போரூர் அருகேயுள்ள முகலிவாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் 750 போலீசார், 360 தீயணைப்புப் படை வீரர்கள், 402 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விபத்தில் மொத்தம் 61 பேர் பலியாகி உள்ளதாகவும் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளதாக தமிழக தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “விபத்து நடந்த பகுதியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படடு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த  பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கடடுப்பாட்டில் எடுத்து கண்காணித்து வருவதாகவும், தெரிவித்த அவர், மேலும் முகலிவாக்கம் மக்களுக்கு குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளையும் செய்துதர ஆவண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply