கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி 19 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
நேற்று முன் தினம் சனிக்கிழமை காலை 8மணியளவில் ராமச்சந்திரன் என்பவரின் 3 வயது மகள் மதுமிதா என்பவர் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். அவருடன் உயிருடன் மீட்க தீயணைப்பு படையினர்களும், அதிரடி படையினரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
19 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மதுமிதா ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். மயக்கநிலையில் இருந்த மதுமிதாவை தயாராக இருந்த ஆம்புலன்ஸில் வைத்து மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் 40 நிமிடங்கள் சிறுமி மதுமிதாவின் உயிரை காப்பாற்ற போராடினார். ஆனால் அவர்களின் சிகிச்சைக்கு பலனின்றி மதுமிதா மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சக்திவேல் என்ற 32 வயது நபர் கைது செய்யபட்டார். அவர்மீது இந்திய தண்டனை சட்டம் 304 (2) என்ற பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.