இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழக வேதியியல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைக்கு கம்புடேஷனல் ஸ்டடீஸ் ஆன் பைமெட்டாலிக்ஸ் நானோ கிளஸ்டர்ஸ் என்ற டிஎஸ்டி-எஸ்இஆர்பி ஆராய்ச்சி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியில் சேரவிரும்பும் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எம்எஸ்சி முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தப்பட்சம் 55 சத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்இடிஎஸ்எல்இடி அல்லது கேட் திறன்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை செப்.15-ஆம் தேதிக்குள் வேதியியல்துறை உதவி பேராசிரியர்-யுஜிசி கங்கா பெரியசாமிக்கு மின்னஞ்சல்: ganga.periyasamy000gmail.com-இல் அனுப்பிவைக்க வேண்டும். தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதி அடிப்படையில் ஆராய்ச்சியாளர் தேர்வுசெய்யப்படுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.