பயோடெக்னாலஜி, அப்ளைடு பயாலஜி துறைகளில் ஆராய்ச்சி

download (5)

பயோடெக்னாலஜி மற்றும் அப்ளைடு பயாலஜி ஆகிய துறைகளில், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, இந்திய குடியுரிமைப் பெற்றவர்களுக்கு, DBT-Research Associateship என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்

இந்த உதவித்தொகையைப் பெற, அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில், பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும் அல்லது மருத்துவத் துறையின் ஏதேனுமொரு பிரிவில், எம்.டி அல்லது எம்.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்தல்

நேர்முகத் தேர்வில் ஒருவரின் செயல்பாடு மற்றும் கரிகுலம் வைட்டே அடிப்படையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். நேர்முகத் தேர்வானது, பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில்(IISc) நடைபெறும். கலந்துகொள்வோருக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் பயணக் கட்டணம் மற்றும் குளிர்சாதன வசதியற்ற பேருந்து பயணக் கட்டணம் ஆகியவை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படுவோர், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில், 1 மாதத்திற்குள் சேர்ந்துவிட வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசித்தேதி மார்ச் 25. தபால் உறையில், “DBT-Research Associateship” என்று கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

விரிவான விபரங்களுக்கு www.sid.iisc.ernet.in/dbtpdf.html என்ற வலைத்தளம் செல்க.

Leave a Reply