ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக்கிலும், சில ஊடகங்களிலும் ஒரு வதந்தி நிலவி வந்தது. அதாவது ஜனவரி 1, 2014 முதல் ரூபாய் நோட்டுகளில் எதாவது எழுதியிருந்தால் அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்றும் வங்கிகள் அத்தைகைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளாது என்றும் கூறப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரூபாய் நோட்டில் ஏதாவது எழுதியிருந்தால் அதை வாங்க மக்கள் மறுத்து வந்தனர்.

இந்த வதந்திக்கு நேற்று இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ருபாய் நோட்டுக்களில் ஏதேனும் எழுதியிருந்தால் அது செல்லாது என்ற வதந்தி உண்மையல்ல என்றும், வங்கிகளுக்கு அதுமாதிரியான எவ்வித அறிவுறுத்தல்களும் கொடுக்கவில்லை என்றும், பொதுமக்கள் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

ஆனாலும் ரூபாய் நோட்டு என்பது நமது தேசியகொடிக்கு இணையானது. அதற்கு மதிப்பு கொடுத்து பொதுமக்கள் தேவையில்லாமல் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை நிறுத்திக்கொள்வது நலம் என்று அறிவுரை கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த விளக்கத்தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply