இந்திய ரிசர்வ் வங்கி காந்தி படம் போட்ட புதிய 10 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. 2014 என ஆண்டின் எழுத்து அச்சிடப்பட்டிருக்கும் இந்த ரூபாய் நோட்டின் நம்பரிங் பேனலில் ‘எம்’ என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய கீழ், மேல் வரிசை எண்கள் அச்சிடப்படும்.
ஆனால், நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முந்தைய மகாத்மா காந்தி நோட்டுக்களை போலவேதான் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியானபோதிலும், பழைய ரூபாய் நோட்டுக்கள் வழக்கம் போல பழக்கத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.