தங்க நகைகள் மீது கடன் வழங்கும் அளவை 60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக வழங்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.
சென்ற ஆண்டு வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் தங்க நகைகளின் பேரில் கடன் வழங்குவதற்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒன்று நகைகளின் மதிப்பில் 60 சதவிகிதம் மட்டுமே கடன் கொடுக்க வேண்டும் என்பது. தற்போது அதை தளர்த்தி 75 சதவிகிதம் கடன் கொடுக்கலாம் என அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.,
ஆனாலும் மற்ற விதிமுறைகளான ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக கடன் பெற்றால் வாடிக்கையாளரின் பான் கார்டு நகல் பெறவேண்டும், ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் பெறுபவர்களுக்கு ரொக்கமாக பணம் கொடுக்காமல் காசோலையாக கொடுக்கவேண்டும், போன்ற விதிமுறைகளில் மாற்றம் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தனியார் நிதி நிறுவனங்கள் பெரிதும் உற்சாகமடைந்துள்ளன.