திருத்தப்பட்ட பேருந்துகள் கட்டணம்: இன்று முதல் அமல்

திருத்தப்பட்ட பேருந்துகள் கட்டணம்: இன்று முதல் அமல்

தமிழகத்தில் சமீபத்தில் சுமார் 60% வரை பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து தமிழக அரசு கொஞ்சமாக பேருந்து கட்டணங்களை குறைத்துள்ளது.

இதன்படி இனிமேல் சாதாரண பேருந்தில் கி.மீ-க்கு 2 பைசாவும், விரைவு மற்றும் சொகுசு பேருந்தில் கி.மீ 5 பைசாவும் அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் குளிர்சாதன பேருந்தில் கி.மீ-க்கு 10 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

இருப்பினும் ஏற்றும்போது ரூபாய் கணக்கில் ஏற்றிவிட்டு குறைக்கும்போது பைசா கணக்கில் குறைத்துள்ள தமிழக அரசை கண்டித்து போராட்டங்களை தொடரவுள்ளதாக அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply