அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பார்வையற்றவர் நியமனம்.

blind justiceஅமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக பார்வையற்ற ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாண உச்சநீதிமன்ற நீதிபதியாக ரிச்சர்ட் பெர்ன்ஸ்டைன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சிறுவயதிலேயே தன்னுடைய பார்வையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்களுக்கு பேட்டியளித்த ரிச்சர்ட், மற்றாவர்களை போல எனக்கு பார்வை இருந்திருந்தால் வழக்கு விவரங்களை நானே படித்துத் தெரிந்துகொண்டு தீர்ப்பு வழங்குவது எளிமையாக இருந்திருக்கும். ஆனால் பிறரது உதவியுடன் படிக்கவும், எழுதவும் வேண்டியிருப்பதால், அதிக உழைப்பும், விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. இருப்பினும் பள்ளிப் பருவத்திலிருந்தே அது எனக்குப் பழகிவிட்டதால் என்னால் சிரமமின்றி நீதிபதி பணியை தொடர முடியும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

ரிச்சர்ட் நியமனம் குறித்து சக நீதிபதி ராபர்ட் யங் என்பவர் கருத்து தெரிவிக்கையில், “நீதிபதி ரிச்சர்ட் பெர்ன்ஸ்டைன் அடைந்துள்ள வெற்றி அசாதாரணமானது” என்று கூறினார்.

Leave a Reply