லண்டன் திரும்பினார் டாக்டர் ரிச்சர்ட் பீலே. முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

லண்டன் திரும்பினார் டாக்டர் ரிச்சர்ட் பீலே. முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

richardகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு சிகிச்சை செய்து வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே மூன்று முறை சென்னை அப்பல்லோ வந்த ரிச்சர்ட் பீலே கடந்த 23-ம் தேதி 4-வது முறையாக சென்னைக்கு வந்து மூன்று நாட்கள் தங்கி முதல்வரின் உடல்நிலையை பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அடுத்தக் கட்டமாக முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை அவர் அப்பல்லோ மருத்துவர்களுக்கு வழங்கிவிட்டு நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவரது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் மீண்டும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply