இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்டு ராகுல் வர்மா அவர்களை நியமனம் செய்ய அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதால் அவருடைய பதவி உறுதியாகியுள்ளது.
46 வயதான ரிச்சர்ட் ராகுல் வர்மாவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமன் செய்து அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக ரிச்சர்டின் நியமனத்தை உறுதி செய்ய செனட் அவையின் வெளியுறவு விவகார குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிச்சர்ட் ராகுல் வர்மாவின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்ட முதல் இந்தியர் ராகுல் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விரைவில் தனக்கு அளிக்கப்பட்ட பதவியை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ரிச்சர்ட் வர்மாவும் உடன் வந்து இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.