தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 1 (தோலுரித்து நறுக்கியது)
முட்டை – 4
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – 1 கையளவு
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மசாலா பொடிகளைத் தூவி, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, மூடி வைத்து 8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், பீர்க்கங்காய் முட்டை பொரியல் ரெடி!!!