பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு சிறை. ஜிம்பாவே அதிபர் உத்தரவு

பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு சிறை. ஜிம்பாவே அதிபர் உத்தரவு

zimbabweசமீபத்தில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாத வீரர்களை சிறையில் அடைக்கும்படி ஜிம்பாவே அதிபர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 31 ஜிம்பாவே வீரர்கள் கலந்து கொண்டபோதிலும் ஒரு வெண்கல பதக்கம் கூட வாங்கவில்லை. இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜிம்பாவே அதிபர் பதக்கம் வெல்லாத வீரர்கள், வீராங்கனைகள் 31 பேர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து ஜிம்பாப்வே வீரர் வீராங்கனைகளும் ஜிம்பாவே விமான நிலையத்தில் இறங்கியவுடன் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் கூறியதாவது: இவர்கள் நாட்டின் பணத்தை வீணாக்கி விட்டனர் இவர்கள் எலிகள் அவர்களை நாம் விளையாட்டு வீரர்கள் என அழைக்கிறோம். அவர்கள் நாட்டிற்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இல்லை.இவர்களால் செம்பு,பித்தளை பதக்கங்கள் கூட வெல்ல முடியவில்லை ஆனால் நமது பக்கத்து நாடு போட்ஸ்வானாவால் முடிந்து உள்ளது. இவர்கள் அங்கு சென்று நமது பணத்தை வீணாக்கி வந்து உள்ளனர் என்று கூறியுள்ளர்.

Leave a Reply