ஐபிஎல் 2017. மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்திய புனே

ஐபிஎல் 2017. மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்திய புனே

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி புனே அணியுடன் மோதியது.

டாஸ் வென்ற புனே, முதலில் பந்துவீச முடிவு செய்ததால் மும்பை  அணி பேட்டிங் செய்தது. நிதானமாக ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8விக்கெட்டுக்களை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

பின்னர் 185 என்ற இலக்கை நோக்கி விளையாடிய புனே 3 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கேப்டன் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி 84 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்

Leave a Reply