ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனை முனை போட்டி?

ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் எத்தனை முனை போட்டி?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாகவுள்ள ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பினை தொடர்ந்து இந்த தேர்தலில் போட்டியிட போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்தார். அவரை எதிர்த்து சசிகலா அதிமுகவில் டிடிவி தினகரன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது

இந்நிலையில் ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை களத்தில் நிறுத்தி தங்களுக்கு மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க முடிவு செய்துள்ளது. இந்த அணியில் இருந்து மதுசூதனன் அல்லது முன்னாள் டிஜிபி திலகவதி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

மேலும் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளராக திருமாவளவனும், பாஜக சார்பில் தமிழிசை செளந்திரராஜனும் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் திமுகவும் இன்னும் ஓரிரு நாட்களில் தங்களது வேட்பாளரை அறிவிக்கவுள்ளது. திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்த விஜயகாந்தின் தேமுதிக போட்டியிடுவது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. அதேபோல் வைகோவின் மதிமுகவும் இதுவரை எந்த போட்டியிடுவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply