ஆர்.கே.நகரில் அலிபாபாவும் 40 திருடர்களும்’. பொன்.ராதாகிருஷ்ணன்
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்கு சமமானவர்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்னம செய்துள்ளார்.
இன்று ஆர்.கே. நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுகவின் இரு அணிகளும், திமுகவினரும் தேர்தலை நிறுத்துவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், யார் பணப்பட்டுவாடா செய்தாலும் அவர்களைக் கைது செய்து ஜாமீனில் வெளிவரமுடியாத அளவிற்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தலை கேலிக்கூத்தாக மாற்ற ஒருசிலர் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் 6 ஆண்டு போட்டியிட முடியாத அளவுக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைக்க சதி நடக்கிறது என்றும், எக்காரணம் கொண்டும் ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைக்கக் கூடாது என்றும் அவ்ர் கோரிக்கை விடுத்தார். வீடு வீடாக சென்று கட்டாயபடுத்தி பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் அலிபாபா கதையில் வரும் 40 திருடர்களுக்கு சமமானவர்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.