ஆர்.கே நகர் தேர்தலை நிறுத்தியது சரியா தவறா? முரண்பட்ட கருத்துகளுடன் பாஜக தலைவர்கள்

ஆர்.கே நகர் தேர்தலை நிறுத்தியது சரியா தவறா? முரண்பட்ட கருத்துகளுடன் பாஜக தலைவர்கள்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும், தமிழகத்தை சேர்ந்த ஒரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அவ்வப்போது முரண்பாடான கருத்துக்களை கூறி வருவது அறிந்ததே. அந்த வகையில் ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்தும் இருவரும் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பணப்பட்டுவாடா செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்சி மற்றும் வேட்பாளருக்கு தகுந்த தண்டனையை கொடுத்துவிட்டு தேர்தலை முறையாக நடத்துவதுதான் சரியாக இருக்கும். அதைவிட்டுவிட்டு தேர்தலை தள்ளிவைப்பது எந்த வகையில் நியாயம் இல்லை’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு தொகுதியில் பணம் கொடுப்பதை இதற்கு முன்னாள் தடுக்க முடிந்ததா? இனிமேல் தடுக்க முடியுமா? என்று கேட்கும் ஒருசில தலைவர்கள் தேர்தலை நடத்தலாம் என்று கூறுவது சரியல்ல. ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். அந்த தீர்வுக்குரிய மாற்றம்தான் தற்போது நடைபெற்றுள்ளது’ என்று கூறினார்

Leave a Reply