ஆர்.கே.நகர் விடுமுறை ரத்து. டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் திறப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அந்த தொகுதியில் ஓட்டு போடுவதற்கு வசதியாக நாளை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி 10 முதல் 12 வரையிலும், வாக்கு எண்ணப்படும் என்று கூறப்பட்டிருந்த 15ஆம் தேதியும் சென்னை முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்த விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வழக்கம் போல் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை ரத்து என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. தேர்தலுக்காக ஒருநாள் விடுமுறை கிடைக்கும் என ஏங்கிய மக்களுக்கு இதுவொரு ஏமாற்றம்தான். ஆனால் அதே நேரத்தில் மதுப்பிரியர்களுக்கு இந்த செய்தி இனிப்பான செய்தி என்பதில் சந்தேகம் இல்லை