விஜய் 60′ படத்தின் மூன்றாவது வில்லன் இவர்தான்
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் நிலையில் மூன்றாவது வில்லனாக ஆர்.கே.சுரேஷ் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே பாலாவின் ‘தாரை தப்பட்டை’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் நெல்லை ரெளடியாக ஆர்.கே.சுரேஷ் நடிப்பதாகவும், இதற்காக இவர் நெல்லை பாஷையை பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருமே இந்த படத்தில் கல்லூரி மாணவர்களாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, பாப்ரிகோஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.