சென்னை சாலையில் மீண்டும் பள்ளம். வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை சாலையில் மீண்டும் பள்ளம். வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


சென்னை அண்ணாசாலையில் அவ்வப்போது திடீர் திடீரென பள்ளம் தோன்றி வாகன ஓட்டிகளை அச்சப்படுத்தி வந்த நிலையில் நேற்று சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் திடீரென 6 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த இடத்திலும் மெட்ரோ ரயில் பணி நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளம் குறித்து தகவலறிந்த மெட்ரோ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த திடீர் பள்ளத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தற்போது இந்த சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சிமென்ட் கலவை கொண்டு மூடப்பட்டுள்ளதாகவும் இந்த பணி சுமார் ஒன்றரை மணி நேரத்தில் முடிவடைந்ததாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply