சென்னை நகரின் சாலைகளின் நடுவில் உள்ள இடையூறான தடுப்பு வேலிகளை அகற்றவும், தேவைப்படும் தடுப்புகளில் ரிஃப்லெக்டர்கள் பொருத்தவும் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சாலைகளின் நடுவில் காவல்துறையினரால் தேவையில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு வேலிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என்றும், இந்த தடுப்பு வேலைகளில் ரிஃப்லைக்டர்கள் இல்லாததால் இரவில் பயணம் செய்பவர்கள் விபத்துக்குள்ளாகிறார்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடைங்கிய பெஞ்ச், ”சாலைகளில் தேவைப்படும் இடங்களில் சிக்னல் பொறுத்த வேண்டும் என்றும் தேவையில்லாத இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவை உடனே அகற்றப்பட வேண்டும்,, தேவைப்படும் தடுப்பு வேலைகளில் ரிஃப்லெக்டர் பொறுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.