டெல்லி செய்தி ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்த சோனியா காந்தி மருமகன். பெரும் பரபரப்பு.

vadraடெல்லியில், பத்திரிகையாளர் ஒருவரை அவமதித்துவிட்டதாக சோனியா காந்தியின் மருமகன் வதேரா மீது குற்றம் சாட்டியுள்ள பத்திரிகையாளர்கள் சங்கம், வதேரா மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவன செய்தியாளர் ஒருவர் செய்தி சேகரிக்க சென்றபோது அவருடைய மைக்கை தள்ளிவிட்டு அவருக்கு இடையூறு  ஏற்படுத்தியதான  சோனியாவின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான வதேரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களின் ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில், அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.கே.சிங் அவர்கள் தெரிவிக்கையில், “ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றுள்ள  நிலபேரம் தொடர்பாக, அங்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை ராபர்ட் வதேராவிடம் ஏஎன்ஐ செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து வதேரா நடந்து கொண்ட விதத்தால், அவர் நாகரீகத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டார். ஜனநாயக அமைப்பான ஊடகத் துறையை தரக்குறைவாக வதேரா விமர்சித்துள்ளார். எனவே  இந்த செயலுக்கு  வதேரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply