ரோபோ வெயிட்டர்களை டிஸ்மிஸ் செய்த சீன ரெஸ்டாரெண்ட்
சரியாக வேலை செய்யாவிட்டால் ஊழியர்களை ஒரு நிறுவனம் டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடும் என்றுதான் நாம் இதுநாள் வரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் சரியாக வேலை செய்யவில்லை என ரோபோக்களை ஒரு நிறுவனம் டிஸ்மிஸ் செய்துள்ளது. அதுதான் சீனத்தலைநகரில் உள்ள பிரபல ரெஸ்டாரெண்ட்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் மிகவும் வித்தியாசமாக முழுக்க முழுக்க ரோபோக்களை வெயிட்டர்களாக அந்த ரெஸ்டாரெண்டின் நிர்வாகம் வேலைக்கு வைத்தது. இது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பெரும் ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் தற்போது இந்த ரோபோ வெயிட்டர்களை நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
ரோபோக்களின் வேலையில் திருப்தியில்லை என்றும் சில சூழ்நிலைகளில் சமயோஜிதமாக நடந்து கொள்ளத் தெரியவில்லை என்றும், அவைகளால் குறிப்பிட்ட வேலை சரிவர செய்யமுடிவதில்லை என்றும் கூறி ரோபோ வெயிட்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Chennai Today News: Robot waiters dismissed at China Restaurant