பாலா-ஜோதிகா படத்தில் ‘லிங்கா’ படத்தயாரிப்பாளர்

பாலா-ஜோதிகா படத்தில் ‘லிங்கா’ படத்தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என்றும், குணசித்திர கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கிய நிலையில் இம்மாத இறுதியில் ராக்லைன் வெங்கடேஷ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்

ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா நடிக்கவுள்ளார். பொதுவாக பாலா படம் என்றால் படப்பிடிப்பு முடிய வருடக்கணக்கில் ஆகும். ஆனால் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்று கூறப்படுகிறது.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply