பிலிப்பைன்ஸ் அதிபரின் தலைக்கு பரிசு அறிவித்துள்ள போதை கடத்தல்காரர்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோட் ரிகோ ட்யூடெர்ட் அவர்களை கொலை செய்பவர்களுக்கு 10 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படும் என போதை பொருள் கடத்தல்காரர்கள் அறிவித்துள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோட் ரிகோ ட்யூடெர்ட் அதிபராக பொறுப்பேற்ற 6 மாதங்களில் சமூக விரோதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் போதைப்பொருள் கடத்துபவர்களை கொல்பவர்களுக்கும் அவர்கள் குறித்த தகவல்கள் தருபவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனால் அவரது தலைக்கே தற்போது மர்ம நபர்கள் பரிசு அறிவித்துள்ளனர். இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல் துறை தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ரொனால்டு தெலா ரோசா என்பவர் அளித்த பேட்டியில் கூறியபோது, “புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோட்ரி கோவை கொலை செய்வோருக்கு 10 லட்சம் டாலர் பரிசு வழங்கப் படும் என மர்ம நபர்கள் அறிவித் துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. கூடிய விரைவில் பரிசு அறிவித்த மர்ம நபர்களை கண்டுபிடிப்போம்’ என்று கூறியுள்ளார்/.
Chennai Today News: Rodrigo Duterte sanctions the killing of criminals