சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில், சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், கனடாவின் வாசெக்கை எதிர் கொண்டார். இதன் முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய பெடரர், “டை-பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 6-7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் சுதாரித்து கொண்ட பெடரர் 7-5 என தன்வசப்படுத்தினார். முடிவில், பெடரர் 6-3, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு ரோஜர் பெடரர் முன்னேறினார்.