பாலியல் அடிமைகளாக விலைக்கு விற்கப்படும் கொடுமை: ரோஹிங்கர்கள் அதிர்ச்சி

பாலியல் அடிமைகளாக விலைக்கு விற்கப்படும் கொடுமை: ரோஹிங்கர்கள் அதிர்ச்சி

மியான்மர் நாட்டில் ரோஹிங்கிய இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மியான்மரில் வசித்துவரும் ரோஹிங்கியர்களை அந்நாட்டில் வசிக்கும் உரிமை இல்லை எனக்கூறி பல்வேறு அமைப்புக்களால் விரட்டியடிக்கப்பட்டு வரும் நிலையில் ரோஹிங்கர்கள் அகதிகளாக இந்தியா உள்பட அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கிய ஆயுதக்குழு ஒன்று பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ராக்கைன் மற்றும் சுற்றுப் புறங்களில் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதனால் லட்சக்கணக்கான ரோஹிங்கியர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அண்டை நாடான வங்கதேசத்திற்கு அகதிகளாகச் சென்ற 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர், காக்ஸ் பஜாரில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரோஹிங்கிய இனத்தின் இளம் பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறுமிகள் பாலியல் அடிமைகளாக விலைக்கு விற்கப்படுவதாகவும் தற்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply