உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: சாம்பியன் படத்தை தவறவிட்ட போபண்ணா ஜோடி
ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் போட்டியில் முதன்முதலாக இந்தியர் ஒருவர் சாம்பியன் ஆகும் நிலை இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு தற்போது கைநழுவி போய்விட்டது.
நேற்று லண்டனில் நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து)- ஹோரியா டெகாவ் (ருமேனியா) ஜோடி 6-4, 6-3 என்ற கணக்கில் ரோகன் போபண்ணா (இந்தியா) புளோரின் மெர்கா (ருமேனியா) ஜோடியை எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முதன்மூலம் இந்தியர் ஒருவர் கலந்து கொண்ட ஜோடி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற கனவு தகர்ந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஜூலியன் ரோஜர்-டெகாவ் ஜோடி இந்த ஆண்டின் நம்பர் ஒன் இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளாக அமெரிக்க சகோதரர்கள் பாப் பிரையன்-மைக் பிரையன் ஜோடிதான் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.