உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர் அடங்கிய தீம் பார்க். சுற்றுலாப் பயணிகளின் த்ரில் அனுபவம்

[carousel ids=”67765,67766,67767,67768,67769″]

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் உள்ள தீம் பார்க்குகளில் முக்கியமாக இடம்பெற்றிருக்கும் ஒரு விளையாட்டு ‘ரோலர் கோஸ்டர்’. இந்த ரோலர் கோஸ்டரில் சென்று வருவது சுற்றுலாப்பயணிகளுக்கு த்ரில் அனுபவத்தை கொடுக்கும் என்பதால் பெரும்பாலானோர் இதில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி உலகிலேயே மிக உயரமான ரோலர் கோஸ்டர் அடங்கிய தீம்பார்க் ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ரோலர் கோஸ்டர் முழுக்க முழுக்க மரத்தால் ஆனது என்பது இன்னொரு சிறப்பு ஆகும். 1,060 மீட்டர் நீளமும், 32 மீட்டர் உயரமும் அடங்கிய இந்த ரோலர் கோஸ்டரில் செல்வதற்காக சீனாவில் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

91கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தவர்கள் தங்கள் த்ரில் அனுபவங்களை கூறும்போது, ‘இதுபோன்ற த்ரில் அனுபவத்தை தாங்கள் இதுவரை வாழ்நாளில் பெற்றதில்லை’ என்று கூறினர். இந்த ரோலர் கோஸ்டரின் உச்சியில் சென்றபோது பயத்தால் தான் கண்ணை மூடிக்கொண்டதாக இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார். இந்த ரோலர் கோஸ்டரில் குறித்த வீடியோக்கள் தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது.

Leave a Reply