அமெரிக்காவை அடுத்து ருமேனியாவும் பெண் தலைவரை இழந்தது

அமெரிக்காவை அடுத்து ருமேனியாவும் பெண் தலைவரை இழந்தது

அமெரிக்க அதிபராக முதன்முதலாக பெண் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவரின் விருப்பத்திற்கு மாறாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அதேபோல் ருமேனியாவில் முதன்முதலாக ஒரு பெண் பிரதமர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு தற்போது பொய்த்துள்ளது.ல்

சமீபத்தில் நடந்த ருமேனியா தேர்தலில் இடதுசாரிகளின் சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து பிரதமர் பதவிக்கு செவில் ஷஹைத் என்ற பெண்ணை பரிந்துரை செய்து அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர் ஒப்புதல் பெற்றால் ருமேனியாவின் முதல் பெண் மற்றும் முதல் இஸ்லாமிய பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் செவில் ஷகைத் அவர்களை அந்நாட்டு அதிபர் கிளவுஷ் ஐஹன்னிஸ் நிராகரித்தார். இந்த நிராகரிப்புக்கு அவர் காரணம் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply