ரோம் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து. பெரும் பரபரப்பு

 romeஇத்தாலி தலைநகரும் பழமை வாய்ந்த நகருமான ரோம் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து உடனே விமான நிலைய ஊழியர்கள் அங்கிருந்த பயணிகளை உடனடியாக வெளியேற்றினர். இருப்பினும் தீவிபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

rome1

இந்த தீவிபத்தில் விமான நிலையத்தின் ஒரு முனையமும், விமான நிலையத்தில் இருந்த ஒருசில கடைகள் பலத்த சேதம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்துதான் தீ பரவியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீவிபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்திற்கு மின்சார கசிவு காரணமா? அல்லது சதி ஏதேனும் நடந்துள்ளத? என்பது குறித்து ரோம் நகர போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.rome2

தீ விபத்தில் விமான நிலையத் தின் ஒரு முனையமும், கடைகள் சிலவும் சேதமடைந்தன. பயணி களின் லக்கேஜ்களை வைக்கும் இடத்தில் முதலில் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தபின்னர் மதியம் 2 மணிக்கு மேல் பயணிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.rome3

விபத்து காரணமாக உள்ளூர் விமானங்களும் சர்வதேச விமானங்களும் காலதாமதமாக சென்றதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    rome4

Leave a Reply